அந்த நபர் ஆட்சியில் இனி நீடிக்கக் கூடாது: ஜோ பைடன் ஆவேசம்
உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பை கடுமையாக விமர்சித்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், விளாடிமிர் புடின் இனி ஆட்சியில் நீடிக்கவே கூடாது என ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
ஐரோப்பாவில் நான்கு நாள் பயணமாக சென்றிருந்த அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், உக்ரைனின் தற்போதைய நிலை, உலக நாடுகளுக்கும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளதாக குறிப்பிட்ட ஜோ பைடன், அந்த நபர் இனிமேலும் ஆட்சியில் நீடிப்பது உலக அமைதிக்கு அச்சுறுத்தலாக முடியும் என ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தொடர்பில் சூசகமாக தெரிவித்துள்ளார்.
வெள்ளைமாளிகையில் ஊடகங்களிடம் பேசும் போது, விளாடிமிர் புடின் ஒரு கொலைகாரன் என குறிப்பிட்டுள்ள ஜோ பைடன், ரஷ்யாவின் கடும் எதிர்ப்புக்கு பின்னர் அந்த கருத்தை வெள்ளைமாளிகை திருத்திக்கொண்டது.
தற்போதும், ரஷ்யாவில் யார் ஆட்சியில் தொடர் வேண்டும் என்பதை அமெரிக்க மக்களும், அந்த நாட்டின் ஜனாதிபதியும் முடிவு செய்ய முடியாது என அந்த நாட்டின் முக்கிய அதிகாரி ஒருவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.