மோசடியுடன் தொடர்புடைய 3 கனடியர்களுக்கு தண்டனை
பாரிய மோசடி சம்பவம் உங்களுடன் தொடர்புடைய மூன்று கனடியர்கள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று ஆரம்பமானது முதல் தனிப்பட்ட பாதுகாப்பு அங்கிகள் கொள்வனவு விவகாரத்தில் இவ்வாறு மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,
இந்த கனடியர்களுக்கு அமெரிக்க நீதிமன்றினால் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த மோசடி சம்பவத்தின் பிரதான சந்தேக நபராக ரிச்மண்ட்ஹில்லைச் சேர்ந்த ஸ்டீவன் மெஸ்ரோக் என்ற 31 வயதான நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த நபர்கள் வட அமெரிக்கா முழுவதும் மோசடிகளில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மோசடி செய்த 39 பேருக்கு 34 லட்சம் அமெரிக்க டாலர்களை செலுத்துமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் குறித்த நபரை அமெரிக்க அதிகாரிகள் கைது செய்திருந்தனர்.
இந்த நபருக்கு 80 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது .
மேலும் மெரினா மார்க்கோஸ் ஹாப்பி என்ற 25 வயது நபரும் ட்விஸ்ட்டர் என்ற 24 வயது பெண்ணும் இந்த மோசடிகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஹாப்பிக்கு நான்கு மாத சிறை தண்டனையும் ஏமாற்றப்பட்டவர்களுக்கு சுமார் ஏழு லட்சம் டொடர்களை செலுத்துமாறு உத்தரவிட்டப்பட்டுள்ளது ட்விஸ்டருக்கு சிறை தண்டனை விதிக்கப்படவில்லை என்ற போதும் 30,000 அபராதம் மட்டும் விதிக்கப்பட்டுள்ளது.