சொந்த பிள்ளைகள் மூவரை... கொடூர தாயார் அதிரடியாக கைது
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் சொந்த பிள்ளைகள் மூவரை கத்தியால் தாக்கி படுகொலை செய்த தாயார் ஒருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
குறித்த சம்பவத்தில் மேலும் இரு பிள்ளைகள் காயங்களுடன் மீட்கபட்டதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது. தகவலை அறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்த பொலிசார் மற்றும் அவசர மருத்துவ உதவிக்குழுவினர் காயமடைந்த இருவரையும் மீட்டு ஹெலிகொப்டர் ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், தாக்குதல் சம்பவத்தில் மூன்று பிள்ளைகள் கொல்லப்பட்டுள்ளதாகவும், இருவர் காயங்களுடன் தப்பியதாகவும், இதில் தொடர்புடைய நபர் கைதாகியுள்ளதாகவும் பொலிசார் உறுதி செய்துள்ளனர்.
இருப்பினும், பெயர்கள் மற்றும் வயது உள்ளிட்ட தகவல்களை வெளியிட பொலிசார் மறுத்துள்ளனர். தெற்கு ஹாரிஸ் தெரு பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் இருந்து சிறார்கள் அலறும் சத்தம் கேட்டு அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு தகவல் அளித்துள்ளனர்.
இந்த விவகாரத்தில் ஐந்து பிள்ளைகளின் தாயார் சந்தேகத்தின் அடிப்படையில் கைதாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இந்த கொலை சம்பவத்தின் நோக்கம் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தும் விசாரணைக்கு பின்னரே தெரியவரும் என கூறப்படுகிறது.