தென்னாபிரிக்காவினை அச்சுறுத்தும் மூன்று புதிய குரங்கு காய்ச்சல்
தென்னாபிரிக்காவில் மூன்று புதிய குரங்கு காய்ச்சல் பாதிப்புக்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இம்மூன்று புதிய குரங்கு காய்ச்சல் பாதிப்புக்களும் கௌதெங் மாகாணத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும், புதிய ஆண்டில் இந்த நோயின் பாதிப்புக்கள் முதல் முறையாகவே கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில், கொங்கோ மற்றும் உகண்டா ஆகிய நாடுகளில் பரவி வரும் கிளேடு I எம்பாக்ஸ் வைரஸின் பாதிப்பானது, உகண்டா நாட்டிற்குச் சென்று திரும்பிய 30 வயது ஆண் ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு குரங்கு காய்ச்சல் பரவுதலைக் கண்டறியும் குழுவினர் மேற்கொண்ட சோதனையில் 27 வயது ஆண் மற்றும் 30 வயது பெண்கள் இருவருக்கும் இந்த நோயின் பாதிப்பு ஏற்பட்டுள்ளது கண்டறியப்பட்டுள்ளது.