டிக் டொக் பெண் பிரலம் சுட்டுக்கொலை... வெளியான பரபரப்பு வீடியோ!
ஈராகில் உள்ள கிழக்கு பாக்தாத் நகரில் ஜோயூனா மாவட்டத்தில் வசித்து வந்த குப்ரான் சவாதி ஓம் பகத் என்ற பெயரில் டிக்-டொக்கில் வீடியோ வெளியிட்டு வந்திருக்கிறார்.
குப்ரான் சவாதியை 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் டிக்-டொக்கில் பின்பற்றுகின்றனர்.
இந்த நிலையில், குப்ரான் சவாதி என்ற இயற்பெயர் கொண்ட ஓம் பகத், அவரது வீட்டிற்கு அருகே காரின் உள்ளே அமர்ந்து இருந்தார்.
அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டுக் கொன்று விட்டு தப்பி ஓடி விட்டார். அங்கேயே சரிந்து குப்ரான் சவாதி உயிரிழந்தார்.
குறித்த தக்குதல் நடத்தியவர் உணவு விநியோகம் செய்வது போல் நடித்ததாகத் ஈராக் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், இந்த தாக்குதலில் மற்றொரு பெண் காயமடைந்ததாக அமெரிக்கா செய்தி நிறுவனம் ஒன்று தெரிவித்துள்ளது.
இதேவேளை, நாட்டின் கலாசாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில் டிக்-டாக் மூலம் வீடியோக்களை பதிவேற்றிய குற்றச்சாட்டின் பேரில் குப்ரான் சவாதிற்கு கடந்த ஆண்டு ஈராக் நீதிமன்றம் 6 மாத சிறைத்தண்டனை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான நிலையில் குப்ரான் மீது துப்பாக்கிச்சூடு மேற்கொள்ளப்பட்ட சம்பவம் தொடர்பான காணொளி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Iraqi social media star ‘Influencer’ Om Fahad was assassinated yesterday by Iranian militias of the Hashd Al Shaabi (PMF) today in Baghdad (Iraq)
— Cyprian, Is Nyakundi (@C_NyaKundiH) April 27, 2024
She didn’t engage in politics or similar but was often attacked by these factions for her ‚liberal lifestyle‘ pic.twitter.com/BgfOBK7pMr