நேர மாற்றத்தல் பிரான்ஸ் அடையவுள்ள நன்மை!
பிரான்ஸில் குளிர்கால நேர மாற்றம் ஏற்பட்டுள்ள நிலையில் மக்களுக்கு எரிவாயுவை சேமிக்க சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சனி முதல் ஞாயிறு வரையிலான இரவில் நேர மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்கமைய நேற்று முதல் ஒருமணி நேரம் குறைக்கப்பட்டு, 2 மணி என நேரமாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இதனால் நேர மாற்றத்திற்கமைய மக்கள் ஒரு மணி நேரம் மேலதிகமாக பெற சந்தர்ப்பம் பெறுவார்கள். இதனால் மின்சார பயன்பாடு குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிரான்ஸ் உள்பட ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு ஆண்டும் கோடைகாலத்திற்கு முன்பு ஒருமுறையும் குளிர்காலத்திற்கு முன் ஒருமுறையும் நேர மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த நேர மாற்றம் எரிசக்தியை சேமிக்கும் நோக்கத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தினால் ஆரம்பிக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும். 1973ஆம் ஆண்டு ஏற்பட்ட எண்ணெய் நெருக்கடியைத் தொடர்ந்து கறுப்பு தங்கத்தின் விலை உயர்வைச் சமாளிக்கும் வகையில் இந்த திட்டம் ஏற்படுத்தப்பட்டது.
தற்போது பிரான்ஸில் அவ்வாறான ஒரு எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில் இந்த சந்தர்ப்பத்தை துல்லியமாக பயன்படுத்திக் கொள்ள அரசாங்கம் முயற்சித்து வருகின்றது.
கோடை காலத்தில் சூரியன் அதிகாலையிலே உதிப்பதாலும் ஒரு மணி நேரம் அதிகரிப்பதன் மூலம், அந்த ஒருமணிநேரம் உறங்குவதை இயற்கை வெளிச்சத்தில் மக்கள் தங்கள் காலை வேலைகளை செய்ய வழி செய்யப்பட்டது.
உதாரணமாக காலை 6 மணிக்கு எழுந்திருக்கும் ஒருவர், கோடையில் நேர மாற்றத்தினால் 5 மணிக்கு எழுந்திருப்பார் . சூரியன் ஏற்கனவே உதித்திருந்ததால் அவர் மின் விளக்குகளை பயன்படுத்த தேவை இல்லை.
இவ்வாறான நடைமுறையின் கீழ் ஒரு நகரத்தில் சேமிக்கப்படும் மின்சாரத்தை கொண்டு 800,000 வீடுகளுக்கு மின்சாரம் வழங்க உதவும் என குறிப்பிடப்படுகின்றது.