பீட்சா மாவு மீது கழிவறை சுத்தம் செய்யும் மாப்; அதிர்ச்சியில் நெட்டிசன்கள்
இந்தியாவின் பெங்களூருவில் உள்ள ஒரு டோமினோஸ் விற்பனை நிலையத்தில் பீட்சா மாவு மீது கழிவறை சுத்தம் செய்யும் மாப் தொங்கிய காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போதைய காலத்தில் பீட்சா என்ற துரித வகை உணவுகளை வாங்கி உண்போர் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது என்றுதான் சொல்லவேண்டும். ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டில் இருந்தே உண்ணலாம் என்பதனால் பீட்சாக்களை ஆர்டர் செய்து பீட்சா பிரியர்கள் உண்டு வருகின்றனர் .
இந்த நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு டோமினோஸ் விற்பனை நிலையத்தில் பீட்சா மாவுகள் வைக்கப்பட்டு தட்டுக்கு மேல் கழிவறைகளை சுத்தம் செய்யும் மாப்கள் தொங்கிக் கொண்டிருந்த காணொளி இணையத்தில் வைரலாகி வருகிறது.
#Watch | Video of mop touching pizza dough at #Dominos goes viral@dominos_india
— Free Press Journal (@fpjindia) August 15, 2022
?️: Sahil Karnany#ViralVideo #Trending #TrendingNow #DominosIndia #DominosPizza #Food #PizzaDough #ViralVideos #FoodSafetyhttps://t.co/dsDO7SVZ96 pic.twitter.com/Ir6LpyIL2D
இதை பார்த்து அதிர்ச்சியான நெட்டிசன்கள் அந்நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.