கனடாவில் பொதுக்கழிப்பறை வடிவமைப்பில் பரிசு வென்றவர்கள்
கனடாவில் பொதுக்கழிப்பறை வடிவமைக்கும் போட்டியில் இரண்டு பேர் பரிசு வென்றுள்ளனர்.
ஹமில்டனை மையமாகக் கொண்ட இரண்டு கட்டிட வடிவமைப்பாளர்கள் பொதுக் கழிப்பறை அமைத்து பரிசு வென்றுள்ளனர்.
அனைவரினாலும் பயன்படுத்தக் கூடிய, அனைவரினாலும் பிரவேசிக்கக் கூடிய மற்றும் பேண்தகு கழிப்பறைகள் நிர்மானிப்பதில் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
கோவிட் பெருந்தொற்று காலத்தில் பொதுக்கழிப்பறைகளின் அவசியம் வெகுவாக காணப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வசதி குறைந்த சமூகத்தினர் இந்த வசதிகளை பயன்படுத்த நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பெருந்தொற்று காலத்தில் பல நிறுவனங்கள் மூடப்பட்ட காரணத்தினால் மக்கள் இவ்வாறு பொதுக் கழிப்பறைகளை பயன்படுத்த நேரிட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அனைத்து சமூகங்களையும் கருத்திற் கொண்டு பொதுக் கழிப்பறைகளை வடிவமைக்கும் போட்டியில் அலியா ரெய்ட் மற்றும் பெட்ரா மாட்டார் ஆகிய கட்டிட கலைஞர்கள் முதல் இடத்தைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.