மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷியா லெப்டினன்ட் ஜெனரல் பலி
மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷியா லெப்டினன்ட் ஜெனரல் பலியானதாக கூறப்படுகின்றது.
உக்ரைன் நேட்டோ நாடுகளை இணைவதை எதிர்த்து கடந்த 2022 பிப்ரவரியில் ரஷியா தொடங்கிய போர் தீர்வு காணடபடாமல் தொடர்ந்து நீடித்து வருகிறது.

இந்நிலையில் ரஷிய தலைநகர் மாஸ்கோவில் கார் குண்டுவெடிப்பில் ரஷியாவின் ஆயுதப் படைகளின் செயல்பாட்டுப் பயிற்சித் துறையின் லெப்டினன்ட் ஜெனரல் ஃபானில் சர்வரோவ் உயிரிழந்துள்ளார்.
இந்த கார் குண்டுவெடிப்புக்கு பின்னால் உக்ரைனின் சதி உள்ளதா என்ற கோணத்தில் ரஷியா விசாரணை நடத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் மாதம் ஜெனரல் யாரோஸ்லாவ் மோஸ்காலிக் மாஸ்கோவில் நடந்த கார் குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்டார்.
அதே சமயம் ஜெனரல் இகோர் கிரிலோவ் 2024 டிசம்பரில் ஸ்கூட்டரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு வெடித்ததில் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.