தாடி காரணமாக தொழிலை இழந்தவர்கள்; மாறியது நடைமுறை
கனடாவில் தங்குமிடங்களில் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டிருந்தவர்கள் தாடி வளர்க்கக் கூடாது என ஓர் நடைமுறை அறிமுகம் செய்யப்பட்டது.
இந்த நடைமுறையின் காரணமாக சீக்கிய பூர்வீகத்தைக் கொண்டவர்கள் தொழில்களை இழக்க நேரிட்டுள்ளது.
தமது மத நம்பிக்கைகளுக்கு குந்தகம் ஏற்படும் வகையில் முகச் சவரம் செய்ய வேண்டுமென நிர்ப்பந்திக்கப்பட்டதனால் சீக்கிய பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் பதவியை இழக்க நேரிட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் சீக்கிய அமைப்புக்கள் குறிப்பாக உலக சீக்கிய அமைப்பு முறைப்பாடு செய்துள்ளது.
இதனைத் தொடாந்து றொரன்டோ நகரின் தங்குமிட பகுதிகளில் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள சீக்கியர்களுக்கு வசதியான தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்கவும், தாடி மீசையுடன் பணிக்கு செல்லவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
நகர நிர்வாகத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு சீக்கிய அமைப்புக்கள் எதிர்ப்பை வெளியிட்டிருந்தன.
முகக் கவசங்களை அணிவதற்காக இவ்வாறு முகச் சவரம் செய்யுமாறு நகர நிர்வாகம் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கியிருந்தது.