றொரன்டோவில் கடுமையான பனிப்புயல் குறித்து எச்சரிக்கை
றொரன்டோவில் கடுமையான பனிப்புயல் தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தென் ஒன்றாரியோ பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு நிலைமை ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சில வீதிகளில் வாகனங்களை நிறுத்த வேண்டாம் என அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 16 மணித்தியாலங்களில் சில இடங்களில் 30 சென்றிமீற்றர் வரையிலான பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சில பகுதிகளில் படர்ந்துள்ள பனிப்பொழிவினை அகற்றும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
ஒரு சில இடங்களில் வாகனங்களை எதிர்வரும் 72 மணித்தியாலங்களுக்கு நிறுத்த வேண்டாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பினை மீறி வாகனங்களை நிறுத்தி வைத்திருக்கும் சாரதிகள் மீது 200 டொலர்கள் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பனிப்புயல் காரணமாக சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.