றொரன்டோவில் மதியழகன் உள்ளிட்ட தம்பதியினர் சிலருக்கு புத்தாண்டில் பிறந்த குழந்தைகள்!
றொரன்டோவில் புத்தாண்டு பிறப்புடன் பிறந்த குழந்தைகள் பற்றிய விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
2023ம் ஆண்டு அதிகாலை 12.01 மணியளவில் சன்ஜீத் என்ற குழந்தை பிறந்துள்ளது.
நோர்த் யோர்க் பொது வைத்தியசாலையில் மதியழகன் தம்பதியினர் குழந்தை ஒன்றை பிரசவித்துள்ளனர்.
இட்டோபிகோக் பொது வைத்தியசாலையில் மற்றுமொரு குழந்தை பிறந்துள்ளது.
ஸ்காப்ரோ உள்ளுர் வைத்தியசாலையிலும் பெண் குழந்தையொன்று பிரசவிக்கப்பட்டுள்ளது.
மிஸ்ஸிசாகுவாவிலும் பெண் குழந்தையொன்று பிரசவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
வோகன் வைத்தியசாலையில் குழந்தையொன்று பிறந்துள்ளதாகவும் அதற்கு ரஹ்மான் என பெயரிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
போர்ட் பெரி வைத்தியசாலையிலும் புத்தாண்டு காலத்தில் குழந்தையொன்று பிரசவிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.