டொரண்டோவில் இளைஞர் வன்முறைகள் அதிகரிப்பு
டொரண்டோ முழுவதும் இளைஞர்களிடையே வன்முறைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர்களிடையே துப்பாக்கிச் சம்பவங்களும் குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
2025-இல் மட்டும் 12க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர் என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த வாரம், டொரண்டோ நகர மையத்தில் வீதியில் தூங்கிக் கொண்டிருந்த வீடற்ற மனிதர் ஒருவர் ஆயுதம் கொண்டு தாக்கி கொல்லப்பட்ட வழக்கில் 12 வயது சிறுவனும் 20 வயது ஆணும் கைது செய்யப்பட்டனர்.
இந்த தாக்குதல்கள் அனைத்தும் தூண்டுதல் இல்லாமல் நடந்தவை என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இந்த வன்முறைகளை தடுத்து நிறுத்துவதற்கு பொலிஸார் மட்டுமன்றி ஏனைய தரப்பினரது ஒத்துழைப்பும் அவசியமானது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
கடந்த ஐந்து ஆண்டுகளில் இளைஞர் துப்பாக்கிச் சூடுகள் தொடர்பிலான கைதுகளின் எண்ணிக்கை இரட்டிப்பானது என தெரிவிக்கப்படுகின்றது.
இளைஞர்கள் மீது விதிக்கப்படும் தண்டனைகள் குறைவானவை என்பதால் குற்றக் கும்பல்கள் இளைஞர்களை பயன்படுத்திக் கொள்வதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.