கனடாவின் இந்தப் பகுதியில் கடுமையான குளிர் குறித்து எச்சரிக்கை!
ரொறன்ரோ நகரில் கடுமையான குளிருடான காலநிலை குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடுங்குளிர் தொடர்பிலான எச்சரிக்கை காரணமாக நகரின் மூன்று வெப்பமாக்கும் நிலையங்கள் திறக்கப்படவுள்ளன.
இன்றைய தினம் (30-01-2023) மறை 11 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நிலவும் எனவும், இது மறை 17 பாகை செல்சியஸ் போன்று உணரப்படும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
நகரின் மருத்துவ அதிகாரி டொக்டர் எய்லீன் டி வில்லா இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.
மறு அறிவித்தல் வரையில் குளிருடான காலநிலை குறித்த எச்சரிக்கை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடற்றவர்கள், குளிரினால் பாதிப்பு ஏற்படக்கூடியவர்கள், நோயாளிகள் போன்றவர்கள் கடும் குளிர் தொடர்பில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மக்கள் வெளியிடங்களுக்கு செல்ல முன்னதாக காலநிலை எச்சரிக்கைகளை கவனத்திற் கொண்டு வெளியே செல்வது உசிதமானது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.