கனடாவில் நகைக் கடையில் கொள்ளையிட முயற்சித்த 4 பேரை தேடும் பொலிஸார்
கனடாவின் ஹாமில்டன் நகரப் பகுதியில் உள்ள ஒரு மாலில், புதன்கிழமை பிற்பகல் நகைக் கடையை கொள்ளையிட முயன்றதாகக் கூறப்படும் பல சந்தேக நபர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஈஸ்ட்கேட் மாலில் உள்ள நகைக் கடைகளில் கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த நேரத்தில், சுமார் நான்கு ஆண் சந்தேக நபர்கள் அங்கு வந்துள்ளனர்.
அவர்கள் கையில் சுத்தியல் மற்றும் க்ரோபார் போன்ற கருவிகள் இருந்ததாக கூறப்படுகிறது.

சந்தேக நபர்களின் முகங்கள் முழுவதுமாக மறைக்கப்பட்டிருந்ததாகவும், போலீஸ் அதிகாரிகள் மற்றும் மால் பாதுகாப்பு பணியாளர்களைக் கண்டதும், அவர்கள் உடனடியாக அங்கிருந்து கருப்பு நிற செடான் காரில் தப்பிச் சென்றதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்த குழு, நகைக் கடையில் கண்ணாடியை உடைத்து வேகமாக கொள்ளையிட்டுச் செல்ல திட்டமிட்டிருந்ததாக போலீசார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக தகவல்கள் உள்ளவர்கள் அல்லது சம்பவம் தொடர்பான வீடியோ/சி.சி.டி.வி காட்சிகள் உள்ளவர்கள், ஹாமில்டன் போலீசாரை தொடர் கொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது.