கனடிய நோயாளிகள் அமெரிக்க வைத்தியசாலைகளுக்கு மாற்றப்படுகின்றனரா?
கனடாவின் டொரன்டோ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் அமெரிக்க வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வெளியாகும் தகவல்களில் உண்மை இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
டொரன்டோவின் பிரபல வைத்தியசாலையான சிக் கிட்ஸ் ( SickKids) வைத்தியசாலையின் நோயாளிகள் இவ்வாறு அமெரிக்காவின் வைத்தியசாலைகளுக்கு தீவிர சிகிச்சைகளுக்காக மாற்றப்பட்டதாக தகவல்கள் வெளியிடப்பட்டிருந்தன.
எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என சிக்கிட்ஸ் வைத்தியசாலை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இந்த வைத்தியசாலையில் சிறுவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சிக்கிட்ஸ் வைத்தியசாலை தீவிர சிகிச்சை பெற்றுக் கொள்ள வேண்டிய நோயாளர்களை அமெரிக்காவின் பப்லோ வைத்தியசாலைக்கு மாற்றப்படுவதாக சமூக ஊடகங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டது.
எனினும் இந்த தகவல்களில் எவ்வித உண்மையும் கிடையாது என வைத்தியசாலை திட்டவட்டமாக மறுத்துள்ளது.
நோயாளர் எண்ணிக்கை வெகுவாக தொடர்ந்து உயர்வடைந்து செல்கின்றது என வைத்தியசாலை நிர்வாகம் ஒப்புக்கொண்டுள்ளது.
எனினும் வளங்களை முழுமையாக பயன்படுத்தி அனைவருக்கும் சிகிச்சை அளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
வைத்தியசாலையில் அதிகளவு நோயாளர்கள் அனுமதிக்கப்படுவதனால் அவசர பிரிவு தவிர்ந்த வெளிநோயாளர் பிரிவு உள்ளிட்ட ஏனைய பிரிவுகளில் சிறிதளவு தாமத நிலை காணப்படுவதகாவும் நோயாளிகள் காத்திருக்க நேரிடுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் பெருந்தொற்று காலம் முதல் கனடாவின் அநேக வைத்தியசாலைகளில் ஆளணி வளப் பற்றாக்குறையினால் பெரும் நெருக்கடிகள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.