லொத்தர் சீட்டு பண பரிசை மோசடி செய்த முதியவர்
கனடாவில் லொத்தர் சீட்டு பண பரிசினை மோசடி செய்ததாக 70 வயது நபர் ஒருவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஒரு குழுவுடன் பகிர வேண்டிய பரிசு தொகையை குறித்த முதியவர் மோசடி செய்தார் என பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. ஒன்றாரிாய மாகாண பொலிசாரிடம் இந்த முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
லொட்டோ மெக்ஸ் ப்ரீ பிளே டிக்கட் என்ற லத்தர் சீட்டில் ஒரு மில்லியன் டாலர் பண பரிசு வென்றெடுக்கப்பட்டுள்ளது.

பண பரிசு தொகை
தாம் இந்த பண பரிசினை தனிப்பட்ட முறையில் பெற்றுக் கொண்டதாக குறித்த நபர் கூறி பல பரிசை பெற்றுக் கொண்டுள்ளார்.
எனினும், இந்த பண பரிசு தொகை ஒரு குழுவினருக்கு உரித்தானது என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்ட போது குறித்த பண பரிசு தொகை மூன்று பேருக்கு உரித்தானது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
இந்த தொகை மூவருக்கும் சமமாக பகிரப்பட வேண்டியது என்பது கண்டறியப்பட்டுள்ளது.
லொத்தர் சீட்டு மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் அலெக்ஸ் பருசா என்ற எழுபது வயது முதியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த நபர் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டதாகவும் எதிர்வரும் ஜனவரி மாதம் 8ம் திகதி இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
கடந்த மே மாதம் 20ம் திகதி நடைபெற்ற லொத்தர் சீட்டிலுப்பில் குறித்த நபருக்கு ஒரு மில்லியன் டாலர் பண பரிசு கிடைக்கப்பெற்றது.