கனடாவில் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடையவர் கைது
கனடாவில் சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை றொரன்டோ பொலிஸார் கைது செய்துள்ளனர்.
றொரன்டோவைச் சேர்ந்த 61 வயதான நபர் ஒருவரை கைது செய்துள்ளனர்.
நான்கு தசாப்தங்களுக்கு முன்னதாக குறித்த நபர் இரண்டு பெண்களை படுகொலை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
61 வயதான ஜோசப் ஜோர்ஜ் சவுத்தர்லான்ட் என்ற நபரை றொரன்டோ பொலிஸார் கொலைகளுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர்.
45 வயதான சூசன் டைஸ் மற்றும் 22 வயதான எரின் கில்மோர் ஆகியோர் கடந்த 1983ம் ஆண்டு டிசம்பர் மாதம் பாலியல் வன்கொடுமைtoronto/tice-gilmour-cold-case-homicides-க்கு உட்படுத்தப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.
விசாரணைகள் காரணமாக குறித்த சந்தேக நபர் பற்றிய மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.