கனடாவில் எலித் தொல்லை அதிகமான நகரம் எது தெரியுமா
கனடாவில் எலிகள் அதிகம் உள்ள நகரம் என்ற ‘அவமானப்’ பட்டத்தை டொரொண்டோ மீண்டும் தக்க வைத்துக்கொண்டது.
பூச்சி மற்றும் வனவிலங்கு கட்டுப்பாட்டு நிறுவனமான Orkin Canada நிறுவனம் செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 2025) வெளியிட்ட 2025-ஆம் ஆண்டுக்கான “எலிகள் அதிகம் உள்ள நகரங்கள்” (Rattiest Cities) பட்டியலில், 2024 ஆகஸ்ட் 1 முதல் 2025 ஜூலை 31 வரையிலான காலகட்டத்தில் செய்யப்பட்ட வீடு மற்றும் வணிக வளாக எலி ஒழிப்பு சேவைகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் டொரொண்டோ முதலிடத்தைப் பிடித்தது.
ஒன்டாரியோ மாகாணத்தின் மிசிசாகா (Mississauga), ஒட்டாவா (Ottawa) ஆகிய நகரங்களும் நாடு தழுவிய அளவில் முதல் பத்து இடங்களுக்குள் இடம்பிடித்துள்ளன.

மக்கள் தொகை அதிகமுள்ள நகரங்களில்தான் எலிகளும் அதிகம் இருக்கும் என்பது ஆச்சரியமில்லை.மனிதர்களும் எலிகளும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கிறார்கள்; நாம் போடும் உணவுத் துண்டுகளே அவற்றுக்கு உணவு என ஒர்கின் கனடா அமைப்பின் உயர் அதிகாரி பெர்னி கிரேஃப் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு குளிர்காலம் மிகவும் லேசாக இருந்ததால், நாடு முழுவதும் எலி பிரச்சினை குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்துள்ளதாகவும், சேவை அழைப்புகளும் பார்த்த எலி புகார்களும் “கணிசமாக” உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு எலிகளின் செயல்பாடு நாடு முழுவதும் பெரிதும் அதிகரித்துள்ளது.
உண்மையான எண்ணிக்கையை வெளியிட்டால் மக்கள் பயந்துவிடுவார்கள் என்பதால் அதை வெளியிடுவதில்லை என கிரேஃப் கூறியுள்ளார்.