உலகின் மோசமான காற்றுத் தரத்தைக் கொண்ட நகரங்களில் ஒன்றாக டொரொண்டோ
டொராண்டோவின் காற்று தரம் தற்போது உலகளவில் மிக மோசமானவற்றில் ஒன்றாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளது.
சுவிஸ் காற்று தர கண்காணிப்பு நிறுவனமான IQAir-ன் இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.
டொராண்டோ உலகின் முக்கிய நகரங்களில் இரண்டாவது மிகவும் மாசுபட்ட நகரமாக தரப்படுத்தப்பட்டது.
காற்று தர அறிக்கை
அதிகாலையில், இந்நகரம் மூன்றாவது இடத்தில் இருந்தது. காட்டுத் தீயால் ஏற்பட்ட புகை டொராண்டோவின் வானத்தை மறைத்திருப்பதால், ஒரு சிறப்பு காற்று தர அறிக்கை அமலில் உள்ளது.
காட்டுத் தீ புகை திங்கட்கிழமை முழுவதும் தெற்கு ஒன்டாரியோவின் பெரும்பகுதியை பாதிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது செவ்வாய்க்கிழமை வரை நீடிக்கலாம் என கனடிய சுற்றாடல் திணைக்களம் அறிவித்துள்ளது.
திங்கட்கிழமை காலை 6 மணியளவில், டொராண்டோ நகர மையத்தின் காற்று தர ஆரோக்கிய குறியீடு (AQHI) ஆறாக இருந்தது, இது மிதமான அபாயமாக கருதப்படுகிறது என்று ஏர் குவாலிட்டி ஒன்டாரியோ தெரிவித்தது.
இது மாலையில் ஏழு என்ற உயர் அபாயத்தை எட்டி, பின்னர் ஐந்தாக குறையும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
காட்டுத் தீ புகையால் காற்று தரமும் புலப்படுத்தலும் குறுகிய தூரங்களில் மாறுபடலாம் மற்றும் மணி நேரத்திற்கு மணி நேரம் கணிசமாக மாறலாம்," என்று சிறப்பு காற்று தர அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.