எரிமலையில் ஏறியபோது மின்னல் தாக்கி சுற்றுலா பயணி பலி
இத்தாலியின் சிசிலி தீவில் அமைந்துள்ள மவுண்ட் எட்னா எரிமலையில் மின்னல் தாக்கியதில் 29 வயதுடைய அமெரிக்க சுற்றுலாப் பயணி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை எரிமலையில் நடைபயணம் மேற்கொண்டிருந்தபோது, திடீரென ஏற்பட்ட இடியுடன் கூடிய மழையின் போது அவர் மின்னல் தாக்குதலுக்கு உள்ளானதாக இத்தாலிய தீயணைப்புப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தகவல் கிடைத்ததையடுத்து மீட்புக் குழுவினர் ஹெலிகொப்டர் மூலம் சென்று அவரை மீட்டு வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
எனினும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற பகுதி எரிமலையின் அண்மைய செயற்பாடுகள் காரணமாக பார்வையாளர்களுக்கு கட்டுப்படுத்தப்பட்ட பகுதியாக இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மவுண்ட் எட்னாவில் அண்மைக்காலமாக எரிமலைச் செயற்பாடுகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.