அமெரிக்க பொருளாதார போரினால் கனடாவிற்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்
அமெரிக்கா தொடுத்துள்ள பொருளதார போரினால் கனடாவிற்கு பெரும் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கனடிய மக்களினதும் நிறுவனங்களினதும் நிதிநிலைமைகள் 2025ஆம் ஆண்டு தொடக்கத்தில் ஆரோக்கியமான வளர்ச்சிக்குள் இருந்தன.
இருப்பினும், அமெரிக்கா தொடங்கிய வரித் தகராறு அந்த நிலையை அச்சுறுத்துவதாக வங்கிக் கானடா (Bank of Canada) தெரிவித்துள்ளது.
வங்கியின் "நிதி நிலைத்தன்மை அறிக்கையில்" வெளியான தகவலின்படி, கடந்த வருடத்தை விட இந்த வருடத்தின் ஆரம்பத்தில் குடும்பங்களின் வருமானத்துடன் ஒப்பிடுகையில் கடன் வீழ்ச்சி காணப்பட்டது.
மேலும், நிறுவனங்களின் நிதி நிலைமைகளும் சாகதமான நிலையில் காணப்பட்டது.
“நாட்டின் நிதி அமைப்பு கடந்த ஆண்டுகளில் பலவித அதிர்ச்சிகளை சந்தித்தாலும், அவை வெற்றிகரமாக எதிர்கொள்ளப்பட்டதாக மத்திய வங்கியின் ஆளுனர் ரிப் மெக்கலம் தெரிவித்துள்ளார்.
வட்டி விகிதங்களும் உறுதித்தன்மையை அதிகரித்திருந்ததாக வங்கியின் ஆளுநர் மேலும் தெரிவித்திருந்தார்.
இது எல்லாம் நடந்தபோது, அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு மனப்பாங்கில் செயல்படும் வரி கொள்கைகள், கனடாவை புதிய சிக்கல்களில் தள்ளி விட்டுள்ளதாக அவர் எச்சரித்துள்ளார்.
“பன்னாட்டு வளர்ச்சிக்கு எதிராக செல்வதுபோல், அமெரிக்க வரி கொள்கைகள் முற்றிலும் தற்காப்பு போக்குடன் மாறிவிட்டன.
இது உலகளாவிய சந்தை வளர்ச்சியை சுருக்கி வருகிறது. ஒரு நீடிக்கும் வரி போர் கனடா பொருளாதாரத்திற்கு மிகப்பெரிய ஆபத்தை உருவாக்கும்,” என மத்திய வங்கி ஆளுனர் தெரிவித்துள்ளார்.