லண்டனில் இந்திய வம்சாவளி சிறுவனின் பரிதாப முடிவு
லண்டன் வேல்ஸ் டாஃப் ஆற்றில் மூழ்கி 13 வயது இந்திய வம்சாவளி சிறுவன் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செவ்வாயன்று கார்டிஃபில் உள்ள டாஃப் ஆற்றில் இந்திய வம்சாவளி சிறுவன் ஆர்யன் கோனியா காணாமல் போனதாகக் கூறப்பட்டது.
இதனையடுத்து உள்ளூர் காவல்துறை, தீயணைப்பு, ஆம்புலன்ஸ், கடலோர காவல்படை மற்றும் காவல்துறை ஹெலிகொப்டர் மூலம் விரிவான தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
சிறுவன் ஆர்யன் கண்டுபிடிக்கப்பட்ட நேரத்தில், , சம்பவயிடத்திலேயே அவர் மரணமடைந்துள்ளதை உறுதி செய்ததாகவும் தெற்கு வேல்ஸ் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
ஆர்யன் கோனியாவின் இழப்பால் மொத்த குடும்பமும் துயரத்தில் ஆழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்யன் கணிதம் மற்றும் கல்வியில் அதிக நாட்டம் கொண்டவர் எனவும், பழகுவதற்கு இனிமையானவர் எனவும் அவரை இழந்துள்ளது ஆறாத துயரம் எ குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை தெற்கு வேல்ஸில் ஒரு மாதத்திற்குள் ஆற்றில் மூழ்கி மரணமடைவது இது இரண்டாவது நபராகும். மோரிஸ்டன் பகுதியை சேர்ந்த 13 வயதான கேன் எட்வர்ட்ஸ் ஆற்றில் மூழ்கி மரணமடைந்த நான்கு வாரங்களுக்குப் பிறகு ஆர்யன் இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.