ரஷ்யா ட்ரோன் தாக்குதலால் தீப்பிடித்து எரிந்த ரயில், பலர் பலி ; உக்ரைனில் தொடரும் அவலம்
உக்ரைனின் பல்வேறு நகரங்கள் மீது, ரஷ்யா நடத்திய ட்ரோன் தாக்குதலில், 12 பேர் பலியாகி உள்ளனர். இதில் வடகிழக்கு கார்கிவ் பகுதியில் தொடருந்து மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.
கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையேயான போர் நான்கு ஆண்டுகளை எட்டியுள்ளது.

மீண்டும் தாக்குதல்
இதை நிறுத்த அமெரிக்கா தலைமையில், முத்தரப்பு பேச்சு நடந்து வருகிறது. அதில் உடன்பாடு ஏற்படாததால், ரஷ்யா மீண்டும் தாக்குதலை துவங்கியுள்ளது.
உக்ரைனின் கார்கிவ், ஓடேசா, டொனெட்ஸ்க் உட்பட பல நகரங்களில் ரஷ்யப் படைகள் ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளன. வடகிழக்கு கார்கிவ் பகுதியில் பயணியர் ரயில் மீது நடத்தப்பட்ட தாக்குதலில், ஐந்து பேர் உயிரிழந்தனர்.
மற்ற இடங்களில் நடந்த தாக்குதல்களில், ஏழு பேர் உயிரிழந்தனர். பேச்சு நடந்து வரும் நிலையில், ரஷ்யா அத்துமீறி இருப்பதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்க்கி கண்டனம் தெரிவித்துள்ளார்.