கனடாவின் பிரபல போக்குவரத்து செயலி முடக்கம்
கனடாவின் பிரபல போக்குவரத்து செயலியொன்று முடக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரபல்யமான போக்குவரத்து செயலியான ரோகட்மான் என்னும் செயலியே இவ்வாறு முடங்க உள்ளது.
எதிர்வரும் நவம்பர் மாதம் 17ம் திகதியுடன் செயலியின் நடவடிக்கைகள் முடிவுறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செயலி பயணிகளின் வருகைத் தகவல்கள் மற்றும் சேவை உள்ளிட்ட விபரங்கள் இந்த தகவல்களில் வெளியிடப்படுகின்றன.
தமது வாடிக்கையாளர்களுக்கு இந்த செயலி நன்றிகளை தெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நல்ல பின்னூட்டங்களுக்கும் நம்பிக்கைக்கும் நன்றி பாராட்டுவதாக தெரிவித்துள்ளது.
மிகுந்த வருத்த்த்துடன் பிரியாவிடை பெற்றுக் கொள்வதாக செயலி மேலும் தெரிவித்துள்ளது.
அனைத்துவிதமான வாடிக்கையாளர் சேவைவகளும் அடுத்த மாதம் 17ம் திகதியுடன் முடிவுக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.