அமெரிக்காவில் இடிந்து விழுந்த கட்டிடத்தில் சிக்கிய குடும்பம்; அவர்கள் தேவதைகள்...கதறி அழும் நண்பர்!

Sulokshi
Report this article
அமெரிக்காவில் 12 மாடி கட்டிடம் இடிந்து விழுந்ததில் கர்ப்பிணி பெண், குடும்பத்தினருடன் இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட சம்பவம் நெஞ்சை நொறுங்க செய்துள்ளது.
அமெரிக்காவிலுள்ள மியாமி பகுதியில் 12 மாடிக்கொண்ட கட்டிடம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று நள்ளிரவில் திடீரென்று இடிந்து விழுந்ததில் 159 நபர்கள் மாயமாகியுள்ளனர்.
அங்கு வசித்த குடும்பங்கள் மண்ணில் புதைந்து விட்ட நிலையில், தற்போது இடிபாடுகளில் மாட்டிக்கொண்ட குடும்பங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகிறது.
பிரிட்டனை சேர்ந்த அமெரிக்க குடியுரிமையுடைய, பாவ்னா பட்டேல் (38) என்ற கர்ப்பிணிப் பெண், அவரின் கணவரான விஷால் பட்டேல், இவர்களின் ஒரு வயது குழந்தை ஐஷானி, மூவரும் இந்த கட்டிட விபத்தில் இடிபாடுகளுக்குள் மாட்டிக்கொண்டனர்.
இந்நிலையில் அவர்களின் குடும்ப நண்பர் விஷால் அபாஷ், கூறுகையில், அன்பு நிறைந்த குடும்பம் அது. என் திருமணத்தில் விஷால் பட்டேல் மாப்பிள்ளை தோழராகவும், பாவ்னா பட்டேல் மணப்பெண் தோழியாகவும் இருந்தனர் என்று கண்ணீருடன் கூறியுள்ளார். மேலும் பூமியில் வாழ்ந்து கொண்டிருந்த அழகான தேவதைகளை கடவுள் தன்னுடன் அழைத்துச் சென்றுவிட்டார் என்று கூறி அவர் கதறியுள்ளார்.

