நத்தார் விடுமுறையைக் கொண்டாடிய பிரதமருக்கு ஏற்பட்ட நெருக்கடி
நத்தார் விடுமுறைக்காக பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, ஜமெய்க்காவிற்கு சென்றமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
அரச நிதியை பயன்படுத்தியதாக ட்ரூடோ குடும்பம் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஏனைய குடும்பங்களைப் போன்றே தாமும் நத்தார் விடுமுறைக்காக வெளிநாடு சென்றதாக பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட செலவுகளை அரசாங்கத்திற்கு மீளச் செலுத்த தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ட்ரூடோவின் ஜமெய்க்கா பயணம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கனடாவின் ஒழுக்கநெறி ஆணைக்குழுவின் பதில் ஆணையாளர் நொராட் வொன் பின்கின்ஸ்டெய்னிடம் இது குறித்து விளக்கம் கோரப்பட உள்ளது.
பிரதமருக்கு வழங்கப்படும் பரிசுகள் மற்றும் பயணங்கள் தொடர்பிலான நியதிகள் குறித்து விளக்கம் கோரப்பட உள்ளது.
பிரதமர் ட்ரூடோ ஒழுக்கநெறிகளை மீறிச் செயற்பட்டாரா என்பது குறித்து விசாரணை நடத்தப்பட உள்ளது.