கனேடிய பிரதமர் குடும்பத்துடன் விடுமுறையை கழிக்க செல்லும் நாடு
கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ(Justin Trudeau) மற்றும் அவரது குடும்பத்தினர் விடுமுறையை கழிப்பதற்காக கொஸ்டா ரிக்காவிற்கு செல்ல உள்ளார்.
இரண்டு வார காலம் பிரதமரும் அவரது குடும்பத்தினரும் கொஸ்டா ரிக்காவில் தங்கியிருப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2019ம் ஆண்டில் கிறிஸ்மஸ் விடுமுறையை கழிப்பதற்காக பிரதமர் ட்ரூடோ (Justin Trudeau) மற்றும் அவரது குடும்பத்தினர் கொஸ்டா ரிக்காவிற்கு சென்றிருந்தனர்.
விடுமுறையை கழிப்பதற்கான செலவுகள் முழுமையாக பிரதமர் குடும்பத்தினர் ஏற்றுக்கொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பிரதமர் ட்ரூடோ (Justin Trudeau) தனிப்பட்ட பயணத்தை மேற்கொண்டாலும் விமானப் படைக்கு சொந்தமான விமானத்திலேயே பயணம் செய்ய வேண்டியது கட்டாயமானதாகும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடைமுறை பின்பற்றப்படுகின்றது.
கடந்த 2019ம் ஆண்டில் பிரதமர் குடும்பத்தினர் விடுமுறை கழிப்பதற்காக கொஸ்டா ரிக்கா பயணம் செய்த போது அதற்காக 57000 டொலர்கள் செலவிடப்பட்டிருந்தது.
கடந்த 2017 பிரதமர் பஹாமாஸ் பயணம் செய்த போது அரசாங்க செலவில் பயணம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.