உலகத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வரும் ட்ரூடோ
பிரித்தானியாவிற்கு விஜயம் செய்துள்ள கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ, உலகத் தலைவர்களை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றார்.
பிரித்தானிய பிரதமர் லிஸ் ட்ரஸை சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். இரு நாடுகளின் பிரதமர்களுக்கும் இடையில் சுமார் 40 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்திற்கு இரங்கல் தெரிவிக்கும் நோக்கில் உலகின் பல நாடுகளினது தலைவர்கள் பிரித்தானியா விஜயம் செய்துள்ளனர்.
பணவீக்கம், வர்த்தக உடன்படிக்கை
பணவீக்கம், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உடன்படிக்கை என்பன குறித்து பேச்சுவார்த்தை நடாத்தப்பட்டுள்ளது.
ஏனைய அரச தலைவர்களுடனும் கனேடிய பிரதமர் ட்ரூடோ பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார். அவுஸ்திரேலியா உள்ளிட்ட சில நாடுகளின் தலைவர்களுடன் பிரதமர் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளார்.
இன்றைய தினம் நடைபெறவுள்ள மகாராணியின் இறுதிக் கிரியை நிகழ்வுகளில் பிரதமர் ட்ரூடோ, ஆளுனர் சிமோன் உள்ளிட்ட கனேடிய பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.