கனடிய பிரதமருக்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு!
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று நடைபெற உள்ளது.
அமெரிக்காவினால் விடுக்கப்பட்டுள்ள பொருளாதார அச்சுறுத்தல்கள் தொடர்பில் இந்த சந்திப்பில் விசேட கவனம் செலுத்தப்பட உள்ளது.
எதிர்வரும் வாரம் இந்த சந்திப்பு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக எதிர்வரும் 15 ஆம் திகதி பிரதமருக்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் சந்திப்பு நடைபெற உள்ளது.
கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ ஏற்கனவே லிபரல் கட்சியின் தலைவர் பதவியை ராஜினாமா செய்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நடைபெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
அண்மைக்காலமாக அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கனடா மீது பல்வேறு அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றார்.
குறிப்பாக கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 வீத வரி விதிக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறான ஓர் நிலையில் கனடிய பிரதமர் முதல்வர்களை சந்தித்து எதிர்காலத்தில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் மூலோபாயங்கள் பற்றி கலந்துரையாட உள்ளார் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.