கனடாவில் மருத்துவர்களுக்கு தீவிர பற்றாக்குறை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் குடும்ப நல மருத்துவர் பற்றாக்குறை நிலைமை தீவிரம் அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கடந்த ஆண்டில் குடும்ப நல மருத்துவர்கள் இன்றி பாதிக்கப்பட்ட கனடிர்களின் மொத்த எண்ணிக்கை 2.5 மில்லியன் என தெரிவிக்கப்படுகிறது.
2026 ஆம் ஆண்டு அளவில் 4.4 வீதமான ஒன்றாரியோ மக்கள் குடும்ப மருத்துவர் வசதி இல்லாமல் அசௌகரியங்களை எதிர் நோக்க நேரிடும் என தெரிவிக்கப்படுகிறது.
எதிர்வரும் சில ஆண்டுகளில் பெரும் எண்ணிக்கையிலான மருத்துவர்கள் ஓய்வு பெற்றுக் கொள்ள திட்டமிட்டுள்ளனர்.
இதனால் குடும்ப நல மருத்துவர்களின் எண்ணிக்கையில் பற்றாக்குறை ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாகவே குடும்ப நல மருத்துவர் எண்ணிக்கையில் பற்றாக்குறை நிலை நீடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.