பள்ளிக்கூட சபைகளின் கணனி கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல்
கனடாவில் பள்ளிக்கூட சபைகளின் கணனி கட்டமைப்பு மீது சைபர் தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
ரொறன்ரோ பெரும்பாக பகுதியின் பல்வேறு பள்ளிக்கூட சபைகள் மீது இவ்வாறு சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
பள்ளிக்கூட மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் தகவல் சேகரிப்பு கட்டமைப்புகள் ஊடுருவப்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
கடந்த டிசம்பர் மாதம் 22 ஆம் திகதி முதல் 28 ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறான தகவல்கள் ஊடுருவப்பட்டன என்பது பற்றிய முழுமையான விபரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.
எவ்வாறெனினும், பாதுகாப்பு பிரிவினர் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.