கனடா விளையாடும் கால்பந்து போட்டியை பார்க்காமல் அமெரிக்கா சென்ற ட்ரூடோ
கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ உலகக்கிண்ண கால்பந்து போட்டியில், கனடா விளையாடுவதைப் பார்க்காமல் அமெரிக்கா சென்ற விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
இம்முறை, உலகக் கிண்ண கால்பந்து விளையாட்டை கனடா, அமெரிக்கா மற்றும் மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் இணைந்து நடத்துகின்றன.
ஆண்களுக்காக ஃபிஃபா உலகக்கிண்ண கால்பந்து போட்டிகள் துவங்கியுள்ள நிலையில், கனடாவில் முதல் போட்டி ரொரன்றோ விளையாட்டு மைதானத்திலும், அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்றன.

இந்நிலையில், கனடா விளையாடும் போட்டியை பார்க்காமல், அமெரிக்கா விளையாடும் போட்டியைப் பார்ப்பதற்காக அமெரிக்கா சென்றிருந்தார் கனடா முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ.
Justin Trudeau is facing criticism for showing up to the FIFA World Cup game in the United States instead of watching Canada’s game. pic.twitter.com/u4vzvT2Ve1
— 6ixBuzzTV (@6ixbuzztv) June 13, 2026
அதாவது, ட்ரூடோவின் புதுக் காதலியான அமெரிக்கப் பாடகி கேற்றி பெர்ரி, அமெரிக்காவில் நடைபெறும் கால் பந்து போட்டிகளின் துவக்க விழாவில் பாடல் ஒன்றைப் பாடினார்.
தன் காதலியை உற்சாகப்படுத்துவதற்காகத்தான் அமெரிக்கா சென்றிருந்தார் ட்ரூடோ. ஆனால், அந்த விடயம் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
Trudeau decided to go to the U.S. World Cup opener game instead of Canada’s.
— Ryan Gerritsen🇨🇦🇳🇱 (@ryangerritsen) June 13, 2026
Here he is cheering with Katy Perry when the U.S. scored their first goal.
Just a reminder I added his very own speech to Canadians regarding the U.S. over top of this video to highlight what an… pic.twitter.com/z7qMmFPgnQ
ட்ரூடோ நாட்டை அவமதித்துவிட்டதாகவும், அவர் துரோகி, மோசடியாளர் என்றும் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.
இந்நிலையில், தன் மீதான விமர்சனம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் சமூக ஊடகமான எக்ஸில் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார் ட்ரூடோ.
Sometimes supportive boyfriend duties call. But you know who I’m rooting for to take the Cup 🇨🇦 https://t.co/85DXvsyCPp
— Justin Trudeau (@JustinTrudeau) June 14, 2026
அந்த செய்தியில், சில நேரங்களில், ஒரு காதலனாக என் கடமையைச் செய்யவேண்டியுள்ளது. ஆனால், என் ஆதரவு எந்த அணிக்கு என்பது உங்களுக்கே தெரியும் என்று குறிப்பிட்டுள்ளார் ட்ரூடோ!
ஏற்கனவே திருமணமாகி 18 ஆண்டுகளாக சோபி என்னும் பெண்ணுடன் வாழ்ந்து மூன்று பிள்ளைகளுக்குத் தந்தையான ட்ரூடோவும், காமெடியனான ரஸ்ஸல் பிராண்ட் என்பவரை திருமணம் செய்து விவாகரத்து செய்து, பின் ஓர்லாண்டோ ப்ளூம் என்பவருடன் வாழ்ந்து ஒரு குழந்தைக்குத் தாயான கேற்றியும் 2025 ஜூலை முதல் தீவிரமாக காதலிக்கத் துவங்கிவிட்டது குறிப்பிடத்தக்கது.