சிரியாவில் ஆட்சி கவிழ்க்கப்பட்டமைக்கு கனடா மகிழ்ச்சி
சிரியாவின் ஜனாதிபதியாக கடமையமாற்றிய பஸர் அல் அசாட் பதவி கவிழ்க்கப்பட்டமைக்கு, கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மகிழ்ச்சியை வெளியிட்டுள்ளார்.
நீண்ட காலமாக அடக்கு முறையில் ஆட்சி செய்து வந்த அல் அசாட்டின் ஆட்சி முடிவுக்கு கொண்டுவரப்பட்டமை குறித்து அவர் இவ்வாறு மகிழ்ச்சி வெளியேற்றுள்ளார் தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் அவர் ஓர் பதிவினை இட்டுள்ளார்.
சிறிய நாட்டு மக்கள் புதிய சகாப்தத்தை ஆரம்பிக்க சந்தர்ப்பம் உருவாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் பயங்கரவாதத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் தலைநகரர் டமஸ்கசை கைப்பற்றியிருந்தனர்.
இதனைத் தொடர்ந்து அந்நாட்டு அதிபர் அல்ல சாட் தலைநகரை விட்டு தப்பி சென்றிருந்தார்.
சிரியாவில் ஆட்சி மாற்றம் குறித்து உன்னிப்பாக கனடா அவதானித்து வருவதாகவும் மனித உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் எனவும் பிரதமர் ட்ரூடோ வலியுறுத்தியுள்ளார்.