பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ லண்டன் விஜயம்
கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இன்று காலை லண்டனுக்குப் விஜயம் செய்துள்ளார்.
நாளைய தினம் நடைபெறும் ஐரோப்பிய பாதுகாப்பு உச்சி மாநாட்டில் அவர் பங்கேற்க உள்ளார்.
உக்ரைனில் நிலையான சமாதானத்தை உருவாக்குவதற்கான அடிப்படை நிலைமைகளை அமைப்பதற்கான முயற்சிகளில் ட்ரூடோ ஈடுபடுவார் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த உச்சி மாநாடு ஆரம்பத்தில் ஐரோப்பிய தலைவர்களை உள்ளடக்கியதாக அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது அதன் முக்கியத்துவம் மேலும் உயர்ந்துள்ளது. உக்ரைன் அதிபர் வோலோடிமிர் செலன்ஸ்கி இந்த மாநாட்டில் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
செலன்ஸ்கி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உடன் வெள்ளை மாளிகையில் சந்தித்து கடுமையான பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து, இந்த மாநாடு மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.
உக்ரைன்-அமெரிக்கா இடையே முக்கிய கனிமப்பொருட்கள் தொடர்பான ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது.
இது உக்ரைன்-ரஷ்யா போரை முடிவுக்குக் கொண்டு செல்லும் முயற்சியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
ஆனால், அமெரிக்க பாதுகாப்பு உத்தரவாதங்களைச் சேர்க்க வேண்டுமென்று செலன்ஸ்கி வலியுறுத்தியதை டிரம்ப் வெறுப்புடன் எதிர்க்க, நிலைமை இன்னும் சிக்கலாகியுள்ளது.