இந்தியாவுடன் இனி பேச்சு இல்லை ; பிடிவாதம் பிடிக்கும் ட்ரம்ப்
“இந்தியாவின் வர்த்தக கொள்கை மற்றும் ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கு வது -குறித்த பிரச்னை தீர்க்கப்படாத வரை அந்நாட்டுடன் வர்த்தக பேச்சு கிடையாது,” என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பரஸ்பர வரி கொள்கையை கையில் எடுத்துள்ளார். அதன்படி அமெரிக்காவுடன் வர்த்தக பற்றாக்குறை கொண்ட நாடுகள் மீது அதிக வரி விதித்து வருகிறார்.
ட்ரம்பின் திட்டம்
அமெரிக்காவுக்கு ஒரு நாடு எத்தனை ஆயிரம் கோடி ரூபாய்க்கு பொருட்களை விற்கிறதோ, அதே அளவுக்கு அமெரிக்காவிடம் இருந்தும் வாங்க வேண்டும், அதற்கு குறைவான வரி விதிக்க வேண்டும் என்பது டிரம்பின் திட்டம்.
இதில் பற்றாக்குறை நிலவுவதாகவும், அமெரிக்க பொருட்களுக்கு உலகிலேயே இந்தியா தான் அதிக வரி விதிப்பதாகவும் குற்றஞ்சாட்டி வருகிறார். அத்துடன் ரஷ்யாவிடம் கச்சா எண்ணெய் வாங்கி உக்ரைனுக்கு எதிரான போருக்கு உதவுவதாகவும் கூறினார்.
இந்த காரணங்களுக்காக ஆகஸ்ட் 1ல், இந்தியாவுக்கு 25 சதவீத வரி விதித்தார். இது நேற்று முன்தினம் முதல் அமலுக்கு வந்தது. அமெரிக்கா இதற்கிடையே சமீபத்தில் இதை மேலும் 25 சதவீதமாக உயர்த்தினார்.
அதன்படி இந்திய இறக்குமதி பொருட்களுக்கு வரும் 27 முதல், அமெரிக்காவில் 50 சதவீத வரி விதிக்கப்பட உள்ளது.இதை மத்திய அரசு மற்றும் எதிர்க்கட்சிகள் கடுமையாக கண்டித்துள்ளன.