7,000 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய டிரம்ப் அரசு முடிவு
அமெரிக்க சமூக பாதுகாப்பு நிறுவனம், அதன் 7,000 பணியாளர்களை குறைப்பதற்குத் திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
10 மில்லியன் வயோதிப அமெரிக்கர்களுக்குச் சலுகைகளை வழங்கும் இந்த நிறுவனத்தில் பணியாளர்களின் அளவை குறைப்பதற்கான நடவடிக்கை பணியாளர்களைக் குறைக்கும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பினது தீர்மானத்தின் ஒரு பகுதியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு மாதமும் 73 மில்லியன் ஓய்வுபெற்ற மற்றும் விசேட தேவையுடைய அமெரிக்கர்களுக்குக் காசோலைகளை அனுப்பும் சமூக பாதுகாப்பு நிறுவனம் அதன் பணியாளர்களை 12 சதவீதத்திற்கும் அதிகமானோரைக் குறைக்கப் போவதாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அத்துடன், தமது பிராந்திய அலுவலகங்களை மூடவுள்ளதாகவும் அமெரிக்க சமூக பாதுகாப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.