ஈவிரக்கமின்றி தாயையும் 2 வயது மகளையும் நாடு கடத்திய டிரம்ப் அரசாங்கம்!
அமெரிக்கவில் ஜனாதிபதி டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க பிரஜையான இரண்டு வயது சிறுமியையும் ஒருவயது சிறுமியின் தாயாரையும் உரிய நடைமுறைகளை பின்பற்றாமல் நாடு கடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க பிரஜையான இரண்டு வயது சிறுமியை எந்த விதமான அர்த்தபூர்வமான நடைமுறைகளையும் பின்பற்றாமல் நாடு கடத்தியுள்ளது என சமஸ்டி நீதிபதி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஒரு வயது சிறுமியொருவரின் தாய் ஒருவரை டிரம்ப் நிர்வாகம் நாடு கடத்தியுள்ளது இருவரையும் நிரந்தரமாக பிரித்துள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு அமெரிக்க பிரஜையை நாடு கடத்துவது,நாடு கடத்துவதற்காக தடுத்துவைப்பது அல்லது நாடு கடத்துவதற்காக பரிந்துரைப்பது சட்டவிரோதமானது என அந்த நீதிபதி தெரிவித்துள்ளார்.
நடைமுறைகளை பின்பற்றாமல் நாடு கடத்தியது
அர்த்தமுள்ள நடைமுறைகளை பின்பற்றாமல் அரசாங்கம் அமெரிக்க பிரஜையை நாடு கடத்தியது என்ற சந்தேகத்தின் அடிப்படையில் மே 19 ம் திகதி விசாரணைகளை முன்னெடுக்கப்போவதாக அவர் தெரிவித்துள்ளார்.
லூசியானாவிலும் புளோரிடாவிலும் இந்த சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன என தெரிவித்துள்ள பாதிக்கப்பட்டவர்களின் சட்டத்தரணிகள், குடிவரவு சுங்க அமுலாக்க அதிகாரிகளின் அலுவலகங்களில் இடம்பெற்ற சோதனையின் போது இவர்கள் கைதுசெய்யப்பட்டனர் .
அவர்களிற்கு தங்களின் குடும்பத்தவர்களுடன் பேசுவதற்கான வாய்ப்பினை அதிகாரிகள் வழங்கவில்லை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க சிவில் சுதந்திர சங்கம்,உட்பட பல அமைப்புகள் இவ்வாறான சம்பவங்கள் அதிர்ச்சியூட்டுபவை என்றாலும் அதிகளவு வழமையாகி வருகின்ற அதிகார துஸ்பிரயோகத்தினை வெளிப்படுத்துகின்றன என குறிப்பிட்டுள்ளன.