கடுமையாக விமர்சிக்கப்பட்ட எலான் மஸ்க்
வரி விதிப்பு விவகாரம் மற்றும் ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவது தொடர்பாக இந்தியாவை அமெரிக்க அதிபர் ட்ரம்பின் வர்த்தக ஆலோசகர் பீட்டர் நவரோ கடுமையாக விமர்சித்து வருகிறார்.
அவர் தனது கருத்துக்களை எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
இந்தியாவை விமர்சிக்கும் பீட்டர் நவரோ
இந்த நிலையில் இந்தியாவை விமர்சிக்கும் பீட்டர் நவரோவின் கருத்துகளின் உண்மைதன்மை சரிபார்ப்பு நடவடிக்கையை எக்ஸ் வலைதள நிர்வாகம் எடுத்து உள்ளது.
இதனால் கோபம் அடைந்த பீட்டர் நவரோ எக்ஸ் வலைதளத்தின் உரிமையாளர் எலான் மஸ்க்கை சாடியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பதிவில் கூறியதாவது:- மக்களின் பதிவுகளில் பிரசாரத்தை எலான் மஸ்க் அனுமதிக்கிறார். உண்மை சரிபார்ப்பு குறிப்புகள் முட்டாள்தனமான குறிப்புகளாக உள்ளன. இந்தியா லாபம் ஈட்டுவதற்காக மட்டுமே ரஷிய எண்ணெயை வாங்குகிறது.
ரஷியா உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்குவதற்கு முன்பு இந்தியா ரஷிய எண்ணெயை வாங்கவில்லை. உக்ரேனியர்களை கொல்வதை நிறுத்துங்கள்.
அமெரிக்க வேலைகளை எடுப்பதை நிறுத்துங்கள் என்று தெரிவித்து உள்ளார்.