டிரம்ப் மற்றும் அதிபர் புடின் தொலைபேசியில் பேசவே இல்லை! அது பொய்
அமெரிக்காவின் 47அவது ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசியில் உரையாடினர் என்று கடந்த வாரம் தகவல்கள் வெளியாகின.
இது தொடர்பில் வெளியான தகவல்களில் டொனால்ட் டிரம்ப் ரஷ்ய ஜானதிபதி விளாடிமிர் புடினை தொலைபேசியில் அழைத்து பேசியதாகவும், இருநாட்டு தலைவர்களும் உக்ரைன் போர் தொடரில் பேச்சுவார்த்தை நடத்தினர் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில், டொனால்ட் டிரம்ப் மற்றும் அதிபர் விளாடிமிர் புடின் தொலைபேசியில் பேசவே இல்லை என்று ரஷ்யா தெரிவித்துள்ளது.
மேலும், இருநாட்டு தலைவர்கள் தொலைபேசியில் பேசியதாக வெளியான தகவல்களில் துளியும் உண்மை இல்லை என்று திட்டவட்டமாக மறுத்துள்ளது.
ரஷ்ய செய்தி தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் இதுபற்றி கூறும்போது,
"இது முழுக்க முழுக்க பொய்யான தகவல்," என்று தெரிவித்தார். மேலும், ரஷிய அதிபர் மற்றும் டொனால்டு டிரம்ப் பேசவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் தனியார் நிறுவனம் வெளியிட்ட செய்தியில்,
அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற டிரம்ப் ஃபுளோரிடாவில் உள்ள தனது இல்லத்திலிருந்து ரஷ்ய அதிபர் புடினுக்கு அழைப்பு விடுத்தார் என்றும் இருவரும் கடந்த (07-11-2024) உரையாடினர் என்றும் கூறப்பட்டிருந்தது.