கனடா குறித்து நேர்மறை கருத்து வெளியிட்ட டிரம்ப்
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப், கனடாவைப்பற்றி சில நேர்மறை கருத்துகளை வெளியிட்டார்.
ஆனால், கனடாவோடு வர்த்தக பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடங்குமா என்று கேட்டபோது, அவர் “நாம் பார்க்கலாம் (We’ll see)” என்று மட்டும் பதிலளித்துள்ளார்.
பல சமயங்களில் கனடா உற்பத்தி செய்யும் அதே பொருட்களை தங்களும் உற்பத்தி செய்வதால், முரண்பாடுகள் நீடித்து வருவதாகத் தெரிவித்துள்ளார்.

கடந்த அக்டோபரில், கனடாவின் ஒன்டாரியோ மாகாண அரசினால் வெளியிட்ட ஒரு தொலைக்காட்சி விளம்பர விளக்கத்தால் வர்த்தக பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்பட்டன.
அண்மையில் கனடிய பிரதமர் மார்க் கார்னி, அமெரிக்காவிற்கு விஜயம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வர்த்தக ஒப்பந்தங்கள் மீண்டும் தொடங்குமா — என்பது டிரம்பின் “நாம் பார்க்கலாம்” என்ற பதிலில் உறுதியற்றதாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த சில மாதங்களில் பொருட்கள், இரும்பு, வாகன உற்பத்தி, மரப்பொருள் உள்ளிட்ட பல துறைகளில் அமெரிக்க வரிகள் மற்றும் கட்டுப்பாடுகள் கனடாவிற்கு சவாலாக உள்ளன.