கமலா ஹாரிசின் ரகசிய சேவை பாதுகாப்பை ரத்து செய்த ட்ரம்ப்
கடந்த ஆண்டு நடந்த அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் டிரம்பும், ஜனநாயக கட்சி சார்பில் துணை ஜனாதிபதியாக இருந்தவரும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிசும் போட்டியிட்டனர்.
இதில் ட்ரம்ப் அதிபராக தேர்வு செய்யப்பட்டார். அமெரிக்க சட்டப்படி பதவி விலகிய துணை ஜனாதிபதிக்கு ஆறு மாதங்கள் வரை ரகசிய சேவை பாதுகாப்பு வழங்கப்படும்.

ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு
ஜனாதிபதியாக இருந்தவருக்கு வாழ்நாள் முழுவதும் வழங்கப்படும். ஜோ பைடன் ஆட்சி காலத்தில் முன்னாள் துணை ஜனாதிபதிகளுக்கான பாதுகாப்பு மேலும் 6 மாதத்துக்கு நீட்டிக்கும் வகையிலான உத்தரவு ஒன்று பிறப்பிக்கப்பட்டது.
இந்நிலையில், கமலா ஹாரிசுக்கு வழங்கப்பட்ட ரகசிய சேவை பாதுகாப்பை ட்ரம்ப் அரசு திரும்பப் பெற்றது.
இதுதொடர்பாக ட்ரம்ப் நிர்வாகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், 2025-ம் ஆண்டு ஜனவரியில் பதவி விலகிய கமலா ஹாரிசின் பாதுகாப்பு ஜூலையில் காலாவதியானது.
இதனால் இந்த பாதுகாப்பை விலக்கி கொள்வதற்கான உத்தரவு சமீபத்தில் பிறப்பிக்கப்பட்டது என தெரிவித்தார்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        