டிரம்ப் மீதான அபராதத்தை ரத்து செய்து நீதிமன்றம் தீர்ப்பு
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது விதிக்கப்பட்ட சுமார் அரை பில்லியன் டாலர் அபராதம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
நியூயார்க் மேல்முறையீட்டு நீதிமன்றம் இந்த தீர்ப்பினை வழங்கீயள்ளது. மாநில சட்ட மா அதிபரினால் தொடர்ந்த சிவில் மோசடி வழக்கில் டிரம்பிற்கு இந்த பாரியளவு அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த முடிவு ஒருமனதாக இல்லை என்றாலும், டிரம்ப் மீதான மோசடி பொறுப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. நீதிபதிகள் அவரது பொறுப்பை உறுதிப்படுத்தி, அபராதத்தை ரத்து செய்தனர்,
இதனால் வழக்கு மேலும் மேல்முறையீட்டு ஆய்வுக்கு முன்னோக்கி செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. நியூயார்க் மாநில சட்ட மா அதபிர் லெடிடியா ஜேம்ஸ் இந்த தீர்ப்பிற்கு எதிராக மேல்முறையீடு செய்ய திட்டமிட்டுள்ளார்.
அரை பில்லியன் டாலர்களை செலுத்த வேண்டும் என்ற நீதிமன்றத்தின் உத்தரவு, அமெரிக்க அரசியலமைப்பின் எட்டாவது திருத்தத்தை மீறும் அதிகப்படியான அபராதமாகும்,” என நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பு, டிரம்ப் மீது எடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகள் குறைக்கப்பட்ட அல்லது முழுமையாக நீக்கப்பட்ட மற்றொரு நிகழ்வாகும் என்பது குறிப்பிடத்தக்கது.