அமெரிக்காவுடன் வர்த்தப் பெச்சுவார்த்தைகளைத் தொடரத் தயார் - கனடா
அமெரிக்காவுடனான வர்த்தக பதற்றம் தீவிரமடைந்துள்ள நிலையில், கனடா தன்னால் கட்டுப்படுத்தக்கூடிய விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும் என்று தொழில் அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.
கியூபெக்கின் ஷெர்ப்ரூக் பகுதியில் உற்பத்தியாளர்களுக்கான நிதி உதவி அறிவிக்கும் நிகழ்வில் உரையாற்றிய போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாம் கட்டுப்படுத்த முடியாத பல விஷயங்கள் உள்ளன. அதனால் நாம் கட்டுப்படுத்தக்கூடியவற்றில் முழு கவனம் செலுத்த வேண்டும்,” என கூறியுள்ளார்.

அமெரிக்க நிர்வாகத்தில் முடிவுகளை எடுப்பது ஒரே ஒருவரே – அதாவது ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மட்டுமே என குறிப்பிட்டுள்ளார்.
டிரம்ப் நிர்வாகத்தை “மிகவும் கணிக்க முடியாதது” என வர்ணித்ததுடன், கனடா பிரதமர் அமெரிக்காவுடன் வர்த்தக பேச்சுவார்த்தைகளை தொடர தயாராக உள்ளார் என்றும் தெரிவித்துள்ளார்.
இப்போது பிரதமர் ஆசிய நாடுகளுக்குப் புறப்பட்டுள்ளார். புதிய வாடிக்கையாளர்களையும் சந்தைகளையும் தேடுவதில் கவனம் செலுத்துவார். அதுவே நமக்கு தேவையானது ஜோலி குறிப்பிட்டுள்ளார்.