நீண்ட நாட்களின் பின் டிரம்ப் - எலான் மஸ்க் சந்திப்பு
நீண்ட நாட்களின் பின் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் மற்றும் எலான் மஸ்க் ஆகியோர் சந்தித்து கொண்டனர். சமீபத்தில் சுட்டுக் கொல்லப்பட்ட டிரம்ப் ஆதரவாளர் சார்லி கிர்க்கிற்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வில் சந்தித்து இருவரும் உரையாடினர்.
அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது. இருவரும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி, சமூக ஊடகங்கள் மூலம் மோதலில் ஈடுபட்டனர்.
சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோகம்
முக்கியமாக டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள 'பிக் பியூட்டிஃபுல் பில்' எனப்படும் வரிக்குறைப்பு மசோதா முட்டாள்த்தனமானது என்று மஸ்க் தெரிவித்தார்.
இதனையடுத்து, சிறுமிகள் பாலியல் துஷ்பிரயோக நெட்வொர்க் தொடர்புடைய சர்ச்சைக்குரிய எப்ஸ்டீன் கோப்புகளில் டிரம்பின் பெயர் இருந்ததாகவும், அதனால்தான் விசாரணையின் விவரங்களும் கண்டுபிடிப்புகளும் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்றும் எலோன் மஸ்க் குற்றம் சாட்டினார்.
இதற்கு பதில் அளித்த டிரம்ப், "எலான் மஸ்க் சுயநினைவை இழந்துவிட்டார் என்றும், அவருடன் தன்னால் பேச முடியாது" என்று தெரிவித்தார். டிரம்ப் - எலான் மஸ்க் மோதல் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் தற்போது இருவருக்கும் இடையினால இந்த சந்திப்பு அவர்களுக்குள் மீண்டும் நட்பு துளிர வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.