ட்ர்ம்பின் அமைதி திட்டத்தால் வெடித்த சர்ச்சை
ரஷ்யா- உக்ரைன் இடையே மூன்று ஆண்டுகளுக்கும் மேலாக நடந்து வரும் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கு அமெரிக்கா பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.
இந்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் ரஷ்யா-உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் 28 அம்ச கோரிக்கைகள் அடங்கிய அமைதி திட்டத்தை தயாரித்துள்ளார்.இந்த பட்டியல் ரஷ்யாவிற்கு சாதகமாக இருப்பதாக சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளது.

அமைதி திட்டம்
அதே நேரத்தில் இந்த அமைதி திட்டம் குறித்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஆலோசனை நடத்தி வருகின்றார். வியாழனுக்குள் பதிலளிக்க வேண்டும் என்று ஜனாதிபதி ட்ரம்ப் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் ரஷ்யா உக்ரைனின் தலைநகர் கீவ் மீது பயங்கர தாக்குதலை நடத்தியுள்ளது.
மத்திய பெச்செர்ஸ்க் மாவட்டத்தில் குடியிருப்பு கட்டிடங்கள், எரிசக்தி உள்கட்டமைப்புக்கள் உள்ளிட்டவற்றின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
டினிப்ரோவ்ஸ்கியில் 9 மாடி கட்டிடமானது ரஷ்யாவின் தாக்குதலில் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தது. சுமார் 4 பேர் காயமடைந்துள்ளனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.