விரக்தியின் உச்சத்தில் ட்ரம்ப் ; அர்த்தமற்று போகும் அமைதி ஒப்பந்தம்
ரஷ்யா-உக்ரைன் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை முட்டுக்கட்டை அடைந்ததால், ''நேரத்தை வீணாக்க விரும்பவில்லை'' என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்தார்.
ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இரு நாடுகளுக்கு இடையே அமைதி ஒப்பந்தம் ஏற்படுத்த அமெரிக்கா தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது.

அமைதி ஒப்பந்தம்
அமெரிக்கா பரிந்துரைக்கும் அமைதி ஒப்பந்தத்தில் ரஷ்யாவுக்கு சாதகமான அம்சங்கள் இருப்பதாக உக்ரைன் அதிபர் தொடர்ந்து புகார் கூறி வருகிறார்.
அதேநேரத்தில் உக்ரைன் அமைதி திட்டத்தை ஏற்றுக் கொள்ளுமாறு ஜனாதிபதி ட்ரம்ப் அழுத்தம் கொடுத்து வருகிறார்.
இது தொடர்பாக ஜனாதிபதி ட்ரம்ப் அளித்த பேட்டி: பல சுற்று பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றத்தையும் ஏற்படுத்தாததால், நேரத்தை வீணாக்க விரும்பவில்லை. வார இறுதியில் ஐரோப்பாவில் ஒரு கூட்டத்திற்கு நாங்கள் செல்ல வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.
அவர்கள் என்ன முடிவு எடுக்கிறார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என தெரிவித்தார் .