எச்சில் வைத்த பீட்சாவை ஆதரவாளர்களுக்கு தின்னக் கொடுத்த டொனால்டு ட்ரம்ப்
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்டு ட்ரம்ப், தாம் எச்சில் வைத்த பீட்சாவை தமது ஆதரவளர்களுக்கு தின்னக் கொடுத்துள்ளார்.
புளோரிடா மாகாணத்தின் லீ கவுண்டி பகுதியில் உரையாற்றிய பின்னர், முன்னாள் அமெரிக்க ஜனாதிபதியான டொனால்டு ட்ரம்ப், பீட்சா உணவகம் ஒன்றில் தமது ஆதரவாளர்களுடன் உணவருந்த சென்றுள்ளார்.
அவருடன், குடியரசுக் கட்சியின் பிரதிநிதி பைரன் டொனால்ட்ஸ் உட்பட பலர் சென்றிருந்தனர். இந்த நிலையிலேயே பீட்சா பெட்டி ஒன்றை திறந்து, அதில் இருந்து ஒரு துண்டு பீட்சாவை கொஞ்சம் சாப்பிட்டு விட்டு, எஞ்சிய பகுதியை குழுமியிருந்த தமது ஆதரவாளர்களுக்கு அளித்துள்ளார்.
குற்றவியல் விசாரணை மற்றும் நடவடிக்கைகளை எதிர்கொள்ளும் நாட்டின் முதல் முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் தாம் எச்சில் வைத்த உணவை ஆதரவாளர்களுக்கு அளித்துள்ளது பலரையும் முகம் சுழிக்க வைத்துள்ளது.
கூட்டத்தில் பலரும் வேண்டாம் என பதிலளித்தாலும் சிலர் டிரம்பிடம் இருந்து பீட்சா துண்டுகளை பெற்றுக்கொண்டனர்.
ஆனால் சமூக ஊடகங்களில் பலரும் ட்ரம்பின் இந்த செயலை கடுமையாக விமர்சித்துள்லனர்.
சிலர் வழக்கம் போல ஆதரித்தும் தங்கள் கருத்துகளை பதிவு செய்துள்ளனர்.