17 நாட்டு மக்களுக்கு தடைபோட்ட டிரம்ப்; திகைப்பில் உலக நாடுகள்!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பாதுகாப்பு காரணங்களை கூறி பல்வேறு நாடுகளைச் சேர்ந்த மக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய அதிரடியாக பயணத் தடை விதித்துள்ளார்.
இதன்படி ஆப்கானிஸ்தான், ஈரான், ஏமன், சோமாலியா, சிரியா, லிபியா மற்றும் சூடான் உள்ளிட்ட சுமார் 17 நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைய முழுமையான தடை விதிக்கப்பட்டுள்ளது.

கடுமையான கட்டுப்பாடுகள்
மேலும் கியூபா, வெனிசுலா போன்ற நாடுகளை சேர்ந்தவர்களுக்கு கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
இந்த நடவடிக்கையின் ஒரு பகுதியாக, பாலஸ்தீனிய ஆணையம் வழங்கிய பயண ஆவணங்களை வைத்திருக்கும் நபர்களுக்கும் அமெரிக்காவிற்குள் நுழைய டிரம்ப் நிர்வாகம் முழுமையாக தடை விதித்துள்ளது.
பாலஸ்தீனத்தை ஒரு தனி நாடாக அமெரிக்கா அங்கீகரிக்காத நிலையில், அவர்களை ஆவணதாரர்கள் என்றே அந்நாடு குறிப்பிடுகிறது.
பாலஸ்தீன ஆதரவாளர்களுக்கு எதிராக ஏற்கனவே அமெரிக்க அரசு கடும் நடவடிக்கை எடுத்து வரும் சூழலில், இந்த தடை உத்தரவு சர்வதேச அளவில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
அதேவேளை எல்லை பாதுகாப்பு மற்றும் உள்நாட்டு பாதுகாப்பை உறுதி செய்யவே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.