ஈரானுடனான ஒப்பந்த ஆவணத்தை விரைவில் வெளியிடுவேன் ; ஜி7 மாநாட்டில் டிரம்பின் பரபரப்பு அறிவிப்பு
ஈரானுடனான ஒப்பந்த ஆவணத்தை விரைவில் வெளியிடவுள்ளதாக அமெரிக்க அதிபர் Donald Trump தெரிவித்துள்ளார். இந்த ஆண்டுக்கான G7 Summit 2026, ஜூன் 15 முதல் 17 ஆம் தேதி வரை France நாட்டில் நடைபெற்று வருகிறது.
மாநாட்டின் ஓரங்கமாக, Mohamed bin Zayed Al Nahyan மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்தித்து இருதரப்பு மற்றும் சர்வதேச விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினர்.
இந்த சந்திப்பின் பின்னர் ஊடகங்களிடம் பேசிய டிரம்ப், ஈரானுடனான முழுமையான ஒப்பந்த ஆவணத்தை விரைவில் வெளியிடத் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார்.

“அந்த ஆவணத்தை வெளியிடுவதற்கு முன் சில முறையான ஏற்பாடுகளை மேற்கொள்ள விரும்புகிறேன். எனினும், அதை வெளியிடுவதில் எனக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. அது மிகவும் சிறந்த ஆவணம்,” என அவர் கூறினார்.
மேலும், அந்த ஒப்பந்தத்தில் ஈரான் ஒருபோதும் அணு ஆயுதங்களைப் பெறவோ அல்லது வைத்திருக்கவோ முடியாது என்பதற்கான உறுதிப்பாடுகள் இடம்பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
அத்துடன், விரைவில் செய்தியாளர் சந்திப்பு ஒன்றை நடத்தி, அந்த ஒப்பந்த ஆவணத்தை கேமரா முன்பாக முழுமையாக வாசித்துக் காட்டுவேன் என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.
முன்னதாக, அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான அமைதி ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாகவும், எதிர்வரும் ஜூன் 19 ஆம் திகதி இரு நாடுகளும் அதில் கையெழுத்திடும் என தகவல்கள் வெளியாகியிருந்தன.
இதனிடையே, ஜி7 மாநாட்டில் உலக பொருளாதாரம், பாதுகாப்பு, காலநிலை மாற்றம் மற்றும் சர்வதேச அரசியல் நிலவரங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய விடயங்கள் தொடர்பாக உலகின் முன்னணி நாடுகளின் தலைவர்கள் கலந்துரையாடி வருகின்றனர்.
குறிப்பாக, ஜி7 என்பது உலகின் பொருளாதார ரீதியாக முன்னணி நிலையில் உள்ள ஏழு நாடுகளின் தலைவர்கள் ஆண்டுதோறும் கூடும் சர்வதேச அமைப்பாகும் என்பது குறிப்பிடத்தக்கது.